News June 25, 2024
ஈரோடு எம்.பி. பிரகாஷ் பதவியேற்பு

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரகாஷ், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News October 31, 2025
ஈரோடு: தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன்!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், வேம்மாண்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனபாக்கியம் (55). இவரது இரண்டாவது மகன் சந்தோஷ்ராஜா (40) மதுபோதையில் வந்து தாயுடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆவேசமடைந்த சந்தோஷ் ராஜா, தாய் தனபாக்கியத்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 31, 2025
ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
ஈரோட்டில் வடமாநில தொழிலாளி பலி!

ஈரோடு வெட்டுக்காட்டுவலசில் மில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த லபான் பாட்டியா (44) கடந்த 26ஆம் தேதி மயங்கி விழுந்து தலையில் காயமடைந்தார். இதன் பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டதை போல பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை!


