News June 25, 2024

நாமக்கல் எம்.பி யாக மாதேஸ்வரன் பதவியேற்பு

image

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாதேஸ்வரன், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News March 11, 2026

நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 11, 2026

நாமக்கல்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

image

நாமக்கல் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 11, 2026

நாமக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!