News June 25, 2024
தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார்

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு, தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது முறையாக எம்.பி-யாக பதவியேற்றுள்ளார்.
Similar News
News December 31, 2025
சென்னையில் இ-சேவை, ஆதார் மையம் இயங்காது!

சென்னையில் அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பராமரிப்பு பணியால் இன்று டிச-31 மற்றும் ஜன-1ஆகிய நாட்களில் அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சாதனம் அன்றைய தினம் முழுமையாக பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
சென்னை போக்குவரத்து மாற்றம்!

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் கடற்கரை உட்புறச் சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மூடப்படும் சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்.
News December 31, 2025
சென்னை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

சென்னை, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் ஒக்கியம்பேட்டை பிடிசி பேருந்து நிறுத்தம் அருகே, அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மூதாட்டி புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் சந்துருவை நேற்று (டிச.30) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சந்துரு மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


