News June 25, 2024

ஆனந்தக் கண்ணீர் விட்ட ரஷித் கான்

image

T20 உலகக் கோப்பை தொடரில், முதல்முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி வரலாறு படைத்துள்ளது. இதனால் அந்த அணியின் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். குறிப்பாக, AFG அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரஷித் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இதனிடையே அரையிறுதிக்கு முன்னேறிய AFG அணிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

புதிய பகைவரையும் வெல்வோம்: கனிமொழி

image

அப்பா கருணாநிதி பெற்ற பெரியார் விருதை தான் பெற வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் அண்ணன் ஸ்டாலின் என்று கனிமொழி நெகிழ்ச்சிபட கூறியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், நம் பரம்பரை பகைவரோ, பாரம்பரிய பகைவரோ, புதிய பகைவரோ என விஜய்யையும் மறைமுகமாக குறிப்பிட்டு, அத்தனை பேரையும் வென்று காட்டுவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

News September 17, 2025

சோம்பலை முறிக்கும் உணவுகள்

image

சோம்பல் என்பது உடல் ஆற்றல் இல்லாமல் மந்தமான நிலைக்கு செல்வது ஆகும். சோம்பல் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சத்தான சில உணவுகள், உடல் மற்றும் மூளைக்கு புத்துணர்வு ஊட்டி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அது என்ன உணவுகள் என்பது மேலே போட்டோக்களில் இருக்கு. அதை ஒவ்வொன்றாக பாருங்க. உடலை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2025

இபிஎஸ் சரணடைந்து விட்டார்: ஸ்டாலின்

image

திமுக முப்பெரும் விழாவில், EPS-ஐ CM ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அண்ணாயிசமாக இருந்த அதிமுகவின் கொள்கை, அடிமையிசமாக மாறி, அமித்ஷாவே சரணம் என EPS சரணடைந்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள் என்ற அவர், காலிலேயே விழுந்த பிறகு கர்சீப் எதற்கு என்றுதான் இப்போது பலர் கேட்பதாக, அமித்ஷா – EPS சந்திப்பை சாடியுள்ளார்.

error: Content is protected !!