News June 25, 2024
நெல்லையப்பருக்கு அசதி போக்க வேள்வி

நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயிலில் கடந்த 13 ஆம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி 10 நாள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா நிறைவு பெற்றதை அடுத்து நேற்று(ஜூன் 24) சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஏற்பட்டுள்ள அசதியைப் போக்கும் சிறப்பு கலச வேலி பூஜை நடந்தது. 108 கலசங்கள் வைத்து வேள்வி நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
Similar News
News September 5, 2025
நெல்லை: போலி இணையதளம் எச்சரிக்கை

பிரதமர் திட்டத்தின் பெயரில் போலி இணையதளங்கள் செயல்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நெல்லை இபிஎப்ஓ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரம், கல்வி, ரயில்வே போன்ற 12 துறைகளில் ஆள்சேர்ப்பு நடப்பதாக விண்ணப்பங்களை கோறுகின்றன. இதை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்.
News September 5, 2025
சபாநாயகர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி

கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் வ உ சிதம்பரனார் திருஉருவச் சிலைக்கு (5.9.2025) காலை 9 மணிக்கு அரசின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் ஆகியோர் மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் எம்பி, எம் எல் ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
News September 5, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.04] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.