News June 25, 2024

முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கன்

image

T20 உலகக் கோப்பை தொடரில், முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஃப்கன் அணி. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று ஆஃப்கன்-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த AFG 115/5 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய BAN அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

Similar News

News September 17, 2025

சோம்பலை முறிக்கும் உணவுகள்

image

சோம்பல் என்பது உடல் ஆற்றல் இல்லாமல் மந்தமான நிலைக்கு செல்வது ஆகும். சோம்பல் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சத்தான சில உணவுகள், உடல் மற்றும் மூளைக்கு புத்துணர்வு ஊட்டி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அது என்ன உணவுகள் என்பது மேலே போட்டோக்களில் இருக்கு. அதை ஒவ்வொன்றாக பாருங்க. உடலை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2025

இபிஎஸ் சரணடைந்து விட்டார்: ஸ்டாலின்

image

திமுக முப்பெரும் விழாவில், EPS-ஐ CM ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அண்ணாயிசமாக இருந்த அதிமுகவின் கொள்கை, அடிமையிசமாக மாறி, அமித்ஷாவே சரணம் என EPS சரணடைந்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள் என்ற அவர், காலிலேயே விழுந்த பிறகு கர்சீப் எதற்கு என்றுதான் இப்போது பலர் கேட்பதாக, அமித்ஷா – EPS சந்திப்பை சாடியுள்ளார்.

News September 17, 2025

இந்தியாவின் வியர்வையும் வாசமும் இருக்கணும்: மோடி

image

வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ அடைவதற்கு சுயசார்பு இந்தியா ஒரு முக்கிய பாதையை அமைத்து கொடுக்கும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். இது பண்டிகை காலம் என்பதால், Made in India பொருள்களை வாங்க வேண்டும் என்று 140 கோடி இந்தியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் ஒரு இந்தியரின் வியர்வையும், நம் மண் வாசமும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!