News June 25, 2024

ராணிப்பேட்டையில் 16 பேர் பணியிட மாற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி சமூக பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளராகவும் , கலவை வட்ட வழங்கல் அலுவலர் சம்ஷத் பவானி வடிப்பகம் மற்றும் கெமிக்கல்ஸ் துணை வட்டாட்சியராகவும், துணை வட்டாட்சியர் பரமேஸ்வரி கலவை வட்ட வழங்க அலுவலர் ஆகவும் மொத்தம் 16 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 13, 2025

ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

ராணிப்பேட்டை: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

image

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. ராணிப்பேட்டை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT!

News September 13, 2025

ராணிப்பேட்டையில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்

error: Content is protected !!