News June 25, 2024
ஆம்பூர்: ஒற்றை யானை நடமாட்டம்

ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட பனங்காட்டேரி மலை கிராமத்தில் டஸ்கர் என்னும் ஒற்றைக் காட்டு யானை தஞ்சமடைந்துள்ளது. இதனால், குடியிருப்பு பகுதி அல்லது மலை கிராம பகுதியில் ஒற்றைக் காட்டு யானை குறித்து நடமாட்டம் தெரிந்தால் 9786254998 என்ற தொலை பேசி எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு ஆம்பூர் வனசரக அலுவலர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகநூல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும் போது பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கவனித்து பின் திறக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பதிவை பதிவிட்டுள்ளனர். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
News July 8, 2025
வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.
News July 8, 2025
திருப்பத்தூரில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா? (1/2)

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் (9445000418) புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. <<16990111>>தொடர்ச்சி<<>>