News June 24, 2024
அப்துல் கலாமின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதே போல, திரைத்துறையிலும், இசைத்துறையிலும் புகழுடன் திகழ்ந்த தியாகராஜ பாகவதர் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி, திருச்சி மாவட்ட அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாளான ஜூன் 1ஆம் தேதி, திருச்சி மாவட்ட அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது.
Similar News
News November 17, 2025
மதுரை மக்களே! SIR-தொடர்பாக ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மதுரை 10 தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவ. 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பதிவை எளிமைப்படுத்த வரும் 18, 19 மற்றும் 20 தேதிகளில் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
News November 17, 2025
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
நவ.20 பிஹாருக்கு மிக முக்கிய நாள்!

பிஹார் CM பதவியேற்பு விழா நவ.20-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் PM மோடி மற்றும் NDA கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் CM-மாக மீண்டும் நிதிஷ்குமார்தான் பதவியேற்பார் என கூறப்படும் நிலையில், அது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் முடிந்த உடன் யார் CM என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


