News June 24, 2024
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான். பிற நாடுகளிடம் பொருளாதார உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் பிச்சைக்காரர் ஒருவர் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஷவுகத் என்ற அந்நபர், தனது குழந்தைகளை நாட்டின் உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்கிறார். பிச்சையெடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு ₹1,000 சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
நவ.20 பிஹாருக்கு மிக முக்கிய நாள்!

பிஹார் CM பதவியேற்பு விழா நவ.20-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் PM மோடி மற்றும் NDA கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் CM-மாக மீண்டும் நிதிஷ்குமார்தான் பதவியேற்பார் என கூறப்படும் நிலையில், அது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் முடிந்த உடன் யார் CM என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 17, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
திருச்சி: டெட் தேர்வில் 1629 பேர் ஆப்சென்ட்

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள் – 2, நேற்று (நவ.16) கண்டோன்மெண்ட், கே.கே.நகர், மேலப்புதூர், ஏர்போர்ட், ஸ்ரீரங்கம், சிந்தாமணி, மரக்கடை, உறையூர், தென்னூர் உள்ளிட்ட 51 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு 15,286 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 13,657 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 1629 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


