News June 24, 2024

இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்கும்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களிடம் பெரிய மாற்றத்தை பாஜக உருவாக்கும் எனக் கூறிய அவர், இது திராவிட மாடல் அரசல்ல, சாராய அரசு என வீடு வீடாகப் பிரசாரம் செய்வோம் என்றார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Similar News

News November 17, 2025

சவுதி பஸ் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது: ஜெய்சங்கர்

image

சவுதி அரேபியாவில் நடந்த <<18308684>>பஸ் விபத்தில்<<>> 42 இந்தியர்கள் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

பாஜகவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் கவர்னர்: MP

image

மேற்கு வங்​கத்​தில் TMC தொண்​டர்​களை அழிக்க கவர்னர் ஆனந்த போஸ், ஆயுதங்களை​ பாஜக​வினருக்கு வழங்குகிறார் என மே.வங்க MP கல்​யாண் பானர்​ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்​களுக்கு அடைக்​கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்​டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கல்​யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்​ட நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் எச்சரித்துள்ளார்.

News November 17, 2025

BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

image

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!