News June 24, 2024
கல்லூரி மாணவர் விபத்தில் பலி

அயோத்தியாப்பட்டணம் அருகே சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் (21)(கல்லூரி மாணவர்). இவர் நேற்று இரவு 10.30 மணிக்கு, அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத்தடுமாறி எதிரே வந்த மினி டெம்போ மீது மோதியுள்ளார். இவ்விபத்தில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
யூரியாவைப் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் யூரியாவைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியார் உர விற்பனை நிலையத்தார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் உர விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News August 21, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 21, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.