News June 24, 2024
தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
தேனியில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் முத்துப்பாண்டி, பழனிச்சாமியை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் வேதனை அடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.7) செய்து விசாரணை.
News November 8, 2025
தேனி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
தேனியில் 78 காலி பணியிடங்கள் – கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் 78 காலி பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், க.விலக்கு, தேனி- 625512 என்ற முகவரிக்கு 24.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றார்.


