News June 24, 2024

இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை?

image

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என இபிஎஸ் கூறிய நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை என CPI மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இபிஎஸ் அப்போது பதவி விலகியிருந்தால் வரவேற்றிருப்போம் எனக் கூறிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

Similar News

News November 17, 2025

புது புது Course-களை இலவசமாக கற்க வேண்டுமா?

image

இன்றைய காலக்கட்டத்தில் பல திறமைகள் இல்லையென்றால் பிழைப்பை ஓட்டமுடியாது. இதனால் பியூச்சரை நினைத்து கவலைப்பட வேண்டாம். உங்கள் திறமைகளை வளர்க்க Hubspot Academy இணையதளத்தில் பல Course-கள் இலவசமாக கிடைக்கின்றன. இதில் Digital Marketing, SEO Strategy, content creation போன்ற பயனுள்ள Course-கள் பல உள்ளன. வீடியோ வடிவில் பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டிருப்பதால் கற்பதற்கும் எளிதாக இருக்கும். SHARE.

News November 17, 2025

பைசன் OTT ரிலீஸ் தேதி வெளியானது

image

தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘பைசன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. துருவ் விக்ரமுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த இப்படம், நவ.21-ல் Netflix ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் 500% வரி: டிரம்ப்

image

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 500% வரி விதிக்கும் செனட் மசோதாவை ஆதரிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் போருக்கு கிடைக்கும் நிதியுதவியை குறைக்க, அந்நாட்டுடன் வணிகம் மேற்கொள்ளும் பிற நாடுகளுக்கு இதுபோன்ற வரிவிதிப்புகள் வழிவகுக்கும் என ஏற்கெனவே டிரம்ப் கூறியிருந்தார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி, இந்தியாவுக்கு 50% வரியை USA விதித்தது.

error: Content is protected !!