News June 24, 2024
கள்ளச்சாராய விவகாரம்: இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று(ஜூன் 24) வெளியான அறிக்கையில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் 99941-73313 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
நெல்லையில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் அறுவடைத் தொடங்கிய விவசாயிகளுக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 35 நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அம்பை-12, சேரன்மாதேவி-12, பாளையங்கோட்டை-7, நாங்குநேரி-2, நெல்லை-1, மானூர்-1 என அமைந்துள்ளன. சன்னரக நெல் குவிண்டுக்கு ரூ.2,545 பொதுரகத்துக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். *ஷேர்
News September 14, 2025
நெல்லை: இறந்த நிலையில் பெண் உடல்

பாளை -சீவலப்பேரி மெயின் ரோட்டில் கொம்பந்தானுர் ஊருக்கு மேல்புறம் இசக்கியம்மன் கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்தார். இதுக்குறித்து பாளை தாலுகா போலீசார் பெண் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த பெண் கருப்பு நிறம் பூ போட்ட நைட்டி அணிந்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News September 14, 2025
நெல்லை: ஆசிரியர் மீது மாணவனின் தாய் போலீசில் புகார்

நெல்லை, ஏர்வாடியைச் சேர்ந்த மாணவர், வள்ளியூரில் உள்ள கெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். வகுப்பில் பேசியதாக கூறி ஆசிரியை சுபாஷினி அவரை பிரம்பால் தாக்க, அவர் காயமடைந்தார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணவனின் தாய் நீதிக்காக போராடுவோம் என்றார். மாவட்ட கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்தார்.