News June 24, 2024
தரையில் அமர்ந்து குறைகேட்ட கலெக்டர்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில் இன்று (24.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் நேரில் சென்று தரையில் அமர்ந்து பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நியாயவிலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம், சாலை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News August 13, 2025
ராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (13.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
ராமநாதபுரத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை

வருகிற 15.08.2025 அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆணையரின் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
News August 13, 2025
ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 19.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பகுதியின் குறைகளை மனுக்களாகவும் நேரிலும் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.