News June 24, 2024
குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை

தி.மலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் 2 குழந்தை திருமணம் நடக்க இருந்ததை கண்டறிந்து தடுக்கப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுக்க தொடர்ந்து கிராமங்களில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை திருமணங்களை நடத்துபவர், ஏற்பாடு செய்பவர், பங்கேற்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார்.
Similar News
News August 22, 2025
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025- 2026-ம் கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக http://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News August 21, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு பொதுமக்கள் உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
தி.மலை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.