News June 24, 2024

ராகுலின் ராஜினாமா ஏற்பு

image

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். சட்டப்படி 2 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அவர் எம்பியாக பதவி வகிக்க முடியும். அதனால் வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா கடிதத்தை மக்களவையில் ராகுல் காந்தி அளித்திருந்தார். அதை தற்காலிக சபாநாயகராக பதவியேற்ற பத்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.

Similar News

News November 17, 2025

தவெக புயலில் திமுக காணாமல் போய்விடும்: அருண்ராஜ்

image

விஜய் ஒரு அட்டை தாஜ்மஹால் என உதயநிதி விமர்சித்ததற்கு தவெக அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால்தான் உதயநிதிக்கு எந்த தகுதியுமே இல்லாமல் MLA சீட் கிடைத்தது என்றும் இப்படி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது எனவும் கூறியுள்ளார். மேலும், திமுக சீட்டுக்கட்டால் ஆன கோட்டை என்ற அவர், தவெக மாதிரியான பெரிய புயலில் அந்த கட்சி காணாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

தோனிக்கும் KL ராகுலுக்கும் இடையே உள்ள ஸ்பெஷல்

image

தோனி என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும், KL ராகுலுக்கு கூடுதல் ஸ்பெஷல் போல. ஏனென்றால், தோனியிடம் இருந்து மட்டுமே தனது அனைத்து சர்வதேச போட்டிகளுக்கான cap-ஐயும் தான் பெற்றுள்ளதாக ராகுல் கூறியுள்ளார். இதுவே ஒரு தனித்துவம் தான் என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார். SA-க்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடியதன் மூலம், தோனி, கம்பீர், ரோஹித் வரிசையில் 4,000 டெஸ்ட் ரன்கள் கிளப்பில் ராகுல் இணைந்துள்ளார்.

News November 17, 2025

BREAKING: மழை அலர்ட்.. பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என IMD எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, காஞ்சி, தி.மலை, பெரம்பலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, நாகைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!