News June 24, 2024
ராணிப்பேட்டை அருகே 5 பேர் மீட்பு

வாலாஜா அடுத்த புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், திருவள்ளூர், திருத்தணி, செருக்கனுாரைச் சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை ஆர்டிஓ மனோன்மணி, ஆய்வு மேற்கொண்டு அந்த 5 பேரையும் மீட்டனர். பின்னர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 5 பேரையும் ஒப்படைத்தார்.
Similar News
News September 13, 2025
ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
ராணிப்பேட்டை: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. ராணிப்பேட்டை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT!
News September 13, 2025
ராணிப்பேட்டையில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்