News June 24, 2024
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

குளித்தலை – பேட்டைவாயத்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 24, 27ஆம் தேதிகளில் சேலத்தில் இருந்து கரூா் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் என்றும், அதே தேதிகளில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
ஜன.30 முதல் கருட சேவையும் கல்யாண வைபவமும்!

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் பஞ்ச கருட சேவை மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.ஜனவரி 30-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும். பக்தர்கள் ததேவையான அனைத்து ஏற்பாடுளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 27, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News January 26, 2026
சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

மல்லியகரை, ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி,கீரிப்பட்டி,வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, கருப்பூர், காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, மாமாங்கம்,சூரமங்கலம், ஜங்ஷன்,5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர், உடையாப்பட்டி, அம்மாபேட்டை, வீராணம், பொன்னம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம்,வலசையூர், காரிப்பட்டி, நங்கவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(ஜன.27) காலை 9 மணி மாலை 5 வரை மின் தடை


