News June 23, 2024

இங்கிலாந்து அரையிறுதி செல்ல இதை செய்ய வேண்டும்

image

டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா 115 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முன்னேறும். அதேநேரம் இங்கி., இப்போட்டியில் 18.4 ஓவரில் வெற்றிபெற்றால் எளிதாக அரையிறுதிக்கு சென்று விடும். மாறாக 18.5 ஓவரில் வெற்றிபெற்றால், மற்ற அணிகளை நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்படும்.

Similar News

News September 14, 2025

இங்கி.ல் சீக்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

இங்கிலாந்தில் சீக்கிய பெண் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 20 வயதான சீக்கிய பெண்ணை வழிமறித்த இருவர், நீ இந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல, வெளியே செல் எனக் கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வெள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

News September 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 458 ▶குறள்: மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

News September 14, 2025

சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

image

சிம்பு – வெற்றிமாறன் படத்தில் பணியாற்றுவதை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிக்கவுள்ள வடசென்னை யுனிவர்ஸ் படத்தின் ப்ரோமோ வெளியானது. இதன் மிரட்டலான பின்னணி இசையை கேட்டு இசையமைப்பாளர் யாராக இருக்கும். சந்தோஷ் நாராயணனா ? ஜிவி பிரகாஷா என ரசிகர்கள் விவாதித்தனர். இந்நிலையில், அப்படம் எடுக்கப்பட்டால் தானே இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!