News June 23, 2024
நாளை கூடுகிறது நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின் முதல் முறையாக கூட்டத் தொடர் நாளை பகல் 11 மணிக்கு கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்பிக்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதன்பின், ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறவுள்ளது. ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, ஜூலை 2, 3 தேதிகளில் குடியரசுத் தலைவர் உரை மீது பிரதமர் பதிலளிக்கவுள்ளார்.
Similar News
News November 17, 2025
ஹாஸ்பிடலில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

இந்திய அணியின் கேப்டன் கில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸின்போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. இந்நிலையில் கில்லுக்கு கழுத்து வலி குறைந்திருந்தாலும், அவர் 4-5 நாள்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் கவுஹாத்தியில் நவ.22-ல் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News November 17, 2025
WTC : 4-வது இடத்திற்கு இந்தியா சறுக்கல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. நடப்பு WTC-ல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி, 3 தோல்வி, ஒன்றில் டிரா கண்டுள்ளது. விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 2-வது மற்றும் 3-வது இடங்களில் தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன.
News November 16, 2025
இன்ஸ்டாவில் சூறாவளியாய் சுற்றும் PHOTOS

இமாச்சலில் நடைபெறும் ‘ரௌலானே’ என்னும் திருவிழாவின் புகைபடங்கள் SM-யில் சூறாவளியாக சுற்றி வருகிறது. X தளத்தில் ஒருநபர் பதிவிட, பின்னர் அதை பல்வேறு SM பயனர்களும் பதிவிட தொடங்கினர். அனைவரின் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தை தூண்டிய இந்த திருவிழா, மார்ச் மாதத்தில் ஹோலிக்கு பின்னர் நடத்தப்படுகிறது. டிரெண்டிங்கில் உள்ள போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


