News June 23, 2024
இடைத்தேர்தலில் திமுகவுக்கு மஜக ஆதரவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய இருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். மஜக மாநிலத் செயலாளர் ஷஃபி தலைமையில் விரைவில் தேர்தல் பணிக்குழு அமைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், சிலநாட்களில் பரப்புரையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை மஜக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 17, 2025
கோவை ஆசிரியர் தகுதி தேர்வில் 1526 பேர் ஆப்சென்ட்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு(TET)நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2 தேர்விற்கு 12,370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,844 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 1526 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
News November 17, 2025
ஹாஸ்பிடலில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

இந்திய அணியின் கேப்டன் கில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸின்போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. இந்நிலையில் கில்லுக்கு கழுத்து வலி குறைந்திருந்தாலும், அவர் 4-5 நாள்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் கவுஹாத்தியில் நவ.22-ல் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News November 17, 2025
WTC : 4-வது இடத்திற்கு இந்தியா சறுக்கல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. நடப்பு WTC-ல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி, 3 தோல்வி, ஒன்றில் டிரா கண்டுள்ளது. விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 2-வது மற்றும் 3-வது இடங்களில் தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன.


