News June 23, 2024
சூர்யா படத்தில் இணைந்த மலையாள நடிகர்

‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுஜித் சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் வெளியான ‘ரசவாதி’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 16, 2025
ஆண்மை குறைவு வரும்.. ஆண்களே இதை செய்யாதீங்க

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 16, 2025
பத்திரிகை சுதந்திரம்: எந்த இடத்தில் இந்தியா?

இன்று (நவ.16) தேசிய பத்திரிகை தினம்! நாட்டின் 4-வது தூணாக கருதப்படுவது பத்திரிகை துறை. ஆனால், நம் நாட்டில் பத்திரிகை துறை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என கேட்டால் அதற்கு பதில் சொல்வது சற்று கடினமே. காரணம் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151-வது இடத்தில் உள்ளது. இது பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை உணர்த்துகிறது. தொடர்ந்து நார்வே முதலிடத்தில் உள்ளது.
News November 16, 2025
BREAKING:நாளை விடுமுறையா?: கலெக்டர் அறிவிப்பு

<<18303033>>ஆரஞ்சு அலர்ட்<<>> காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படுமா என பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், திருவாரூர் கலெக்டர் மோகன சந்திரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்காமல், கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


