News June 23, 2024
திருப்பத்தூர்: நகராட்சி சார்பில் 2.0 தூய்மை பணி

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரத்தை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிவராஜ் பேட்டை, சக்தி நகர், கலைஞர் நகர் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் போது நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Similar News
News September 3, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 3, 2025
திருப்பத்தூரில் மதுக்கடைகள் விடுமுறை

திருப்பத்தூரில் வருகிற 5 ஆம் தேதி மீலாடி நபி விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், சொகுசு விடுதிகளுக்கு விடுமுறை அளிக்க ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி உத்தரவிட்டார். இதனை மீறி மது விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு இன்று (செப்-3) வெளியானது.
News September 3, 2025
திருப்பத்தூர்: WFH ரூ.30,000 சம்பளத்தில் வேலை

திருப்பத்தூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து இந்த<