News June 23, 2024

நாமக்கல்லில் புதிய ரேசன் கடை திறப்பு

image

 மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் இன்று (ஜூன் 23) நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகக் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News

News September 3, 2025

முதுகலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

image

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கான தொடர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.மேலும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தின் உதவியுடன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

News September 3, 2025

நாமக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரயில் நேர விபரம்

image

நாமக்கலில் நாளை முதல் சென்னை செல்லும் ரயில்கள் புறப்படும் நேரம் வியாழன் அதிகாலை 1:20AM மணிக்கு – 06059 மதுரை – பரூனி ரயிலும், திங்கள், புதன், வெள்ளி அதிகாலை 1:35 மணிக்கு – 20602 போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் ரயிலும், திங்கள் காலை 5:05 மணிக்கு – 12690 நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் ரயிலும் தினசரி இரவு 9:25 மணிக்கு – 22652 பாலக்காடு, சென்னை சென்ட்ரல் ரயிலும் செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்க.

News September 3, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 3 நாட்களும் தலா 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!