News June 23, 2024

நெல்லை: நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், திமுக அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கட்சியின் இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 3, 2025

நெல்லையில் இனி Whatsapp மூலம் தீர்வு

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News September 3, 2025

நெல்லை: 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு நேர்காணல் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 108,102,155377ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம் செப்.6 அன்று நடைபெற உள்ளது. கீழமுன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் சமுதாய நலக்கூடம் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8925941973, 7397724825, 91500 84149, 7397 724 853  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 3, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில், நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2025 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA, FL11) மற்றும் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்தார். இது அரசாணைகள் மற்றும் மதுவிலக்கு ஆணையர் கடிதத்தின்படி அமல்படுத்தப்படுகிறது.

error: Content is protected !!