News June 23, 2024

முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் – ஆர்.எஸ் பாரதி

image

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்துதான் மெத்தனால் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆகவே இதற்கு முழுவதும் பொறுப்பேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ் பாரதி திமுக அமைப்பு செயலாளர் இன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 3, 2025

புதுவையில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

image

புதுவை, வருவாய் & பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் & பல் நோக்கு உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி புதுவை, காரைக்கால், மாகி & ஏனாம் பகுதிகளில் நடக்க உள்ளது. இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம் & தேர்வு மையங்கள் பற்றிய விபரங்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

News September 3, 2025

புதுவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் சாவு

image

புதுவை பூமியான்பேட், புது தெரு சதீஷ், தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷின் தந்தை கடந்த 30ம் தேதி இறந்தார். அதிலிருந்து மனமுடைந்த நிலையில் இருந்த சதீஷ், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 3, 2025

புதுச்சேரி: உதவித் தொகை வழங்கிய முதல்வர்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று 72 இளநிலை வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகையாக, ரூ.86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்ட செயலர் கேசவன், சட்டத்துறை சார்பு செயலர் ஜானாஸ் ரபி என்கிற ஜான்சி வழக்கறிஞர், சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!