News June 23, 2024

நாளை மறுநாள் இந்தியன்-2 ட்ரெய்லர்

image

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 படத்தின் ட்ரெய்லர், நாளை மறுநாள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம், மிகப்பெரிய ஹிட் ஆனது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தின் 2ஆவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி திரையங்குகளில் ரிலீசாகிறது.

Similar News

News September 13, 2025

பாகிஸ்தான் வெற்றி பெற சரியான தருணம்: மிஸ்பா

image

விராட் கோலி இல்லாததால், இதுவே இந்திய அணியை வீழ்த்த சரியான தருணம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக பெரிய தொடர்களில் விராட் மற்றும் ரோஹித் இல்லாமல் இந்தியா விளையாடவில்லை என கூறிய அவர், டாப் ஆர்டரை காலி செய்தால் பாகிஸ்தானுக்கு வெற்றி எளிதாக கிடைக்கும் எனவும் கூறினார். பாகிஸ்தானின் பந்துவீச்சு நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாய் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஸ்டாலின்

image

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இசைஞானி கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ் தாய்க்கும் சொந்தக்காரர் என புகழாரம் சூட்டிய அவர், அரை நூற்றாண்டாக இளையராஜா பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை என பாராட்டினார். கருணாநிதிக்காக இளையராஜா தனது பிறந்தநாளையே மாற்றினார் எனவும், அவர் இளையராஜா அல்ல, இணையற்ற ராஜா என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

News September 13, 2025

மேடையில் கண் கலங்கிய கமல்..!

image

இளையராஜாவின் பாராட்டு விழாவில் பேசிய கமல், மேடையிலேயே கண் கலங்கினார். அவருக்கு பாராட்டு விழா எடுத்ததற்கு ரசிகனாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கமல் உருக்கமாக கூறினார். இளையராஜா எனக்கு அண்ணன் எனத் தெரிவித்த அவர், உனை ஈன்ற உலகுக்கு நன்றி என்ற பாடலை கண்கலங்க மேடையிலேயே பாடியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

error: Content is protected !!