News June 23, 2024
நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நாளை(ஜூன் 24) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
நாமக்கல்லில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

நாமக்கல் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!
News September 8, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

▶️ நாமக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 8, 2025
நாமக்கல்லில் நாளை மின் தடை!

நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், கபிலர் மலை, அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, தண்ணீர் பந்தல், வீ.பாளையம், சேளூர்நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, எருமப்பட்டி, முசிறி, வளையப்பட்டி, நடந்தை ஆகிய பகுதிகளில் நாளை(செப்.9) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.