News June 23, 2024
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் 2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News September 13, 2025
பெட்ரூமில் இதை செய்யாதீங்க!

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
News September 13, 2025
பாகிஸ்தான் வெற்றி பெற சரியான தருணம்: மிஸ்பா

விராட் கோலி இல்லாததால், இதுவே இந்திய அணியை வீழ்த்த சரியான தருணம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக பெரிய தொடர்களில் விராட் மற்றும் ரோஹித் இல்லாமல் இந்தியா விளையாடவில்லை என கூறிய அவர், டாப் ஆர்டரை காலி செய்தால் பாகிஸ்தானுக்கு வெற்றி எளிதாக கிடைக்கும் எனவும் கூறினார். பாகிஸ்தானின் பந்துவீச்சு நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாய் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஸ்டாலின்

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இசைஞானி கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ் தாய்க்கும் சொந்தக்காரர் என புகழாரம் சூட்டிய அவர், அரை நூற்றாண்டாக இளையராஜா பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை என பாராட்டினார். கருணாநிதிக்காக இளையராஜா தனது பிறந்தநாளையே மாற்றினார் எனவும், அவர் இளையராஜா அல்ல, இணையற்ற ராஜா என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.