News June 23, 2024

நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு கடும் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 18 வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு கடும் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடா வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 27, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வரும் அக்.5 (ஞாயிறு), அக்.6 (திங்கள்), அக்.7 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 27, 2025

நாகை: இன்றே கடைசி வாய்ப்பு!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABFINS, திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer CSO) பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த<> LINK-<<>>ஐ க்ளிக் செய்து, இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் பணியமர்த்தப்படுவர். SHARE NOW

News September 27, 2025

நாகையில் நாளை மாரத்தான் போட்டி

image

நாகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தொடங்கி கங்களாஞ்சேரி சாலையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!