News June 23, 2024
ஆஸ்திரேலியா அணி தோல்வி

T20 WC சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஆஃப்கன் அணி அபார வெற்றி பெற்றது. கிங்டவுனில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த AFG, 148/6 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய AUS அணியை, AFG பந்துவீச்சாளர் திணறடித்தனர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த AUS அணி, 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Similar News
News September 13, 2025
UPI கட்டண வரம்புகள் விவரம்

தனிநபர்கள் நிறுவனங்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்(P2M) வரம்பு செப்.15 முதல் உயர்கிறது. அதன்படி, கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு ஒரு பரிவர்த்தனைக்கு ₹5 லட்சம் (ஒரு நாளைக்கு ₹6 லட்சம்), பயணக் கட்டணம் -₹5 லட்சம், லோன் & EMI -₹5 லட்சம் (₹10 லட்சம்), முதலீடு & இன்ஷூரன்ஸ் -₹5 லட்சம் (₹10 லட்சம்), வரி -₹5 லட்சம், வங்கி சேவைகள் -₹5 லட்சம். எனினும், தனிநபர்களுக்கு அனுப்பும் வரம்பு ₹1 லட்சமாகவே தொடரும்.
News September 13, 2025
கதை விடாதீர்கள் MY DEAR CM சார்: விஜய்

மதுரை மாநாட்டில் CM ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அரியலூர் பரப்புரையில் அங்கிள் என்ற வார்த்தையை தவிர்த்த அவர், நையாண்டியாக சார் என ஸ்டாலினை குறிப்பிட்டார். மேலும், திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், இதை பற்றி கேட்டால் கதை விடாதீர்கள் MY DEAR CM சார் எனவும் விஜய் கிண்டலாக பேசினார்.
News September 13, 2025
நாளை ஒரு நாள் மட்டுமே… Gpay, Phonepe-ல் மிகப்பெரிய மாற்றம்

செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) <<17642370>>தினசரி வரம்பு<<>> ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரையே அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒருமுறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.