News June 23, 2024
கிருஷ்ணகிரியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ்,பயனாளிகள் தொழில் துவங்குவதற்கான ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Similar News
News September 10, 2025
கிருஷ்ணகிரி: காவல் துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் இருசக்கர வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. திருடர்கள் தற்போது வாகனங்களின் ஸ்டோரேஜ் பெட்டியில் உள்ள பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து திருடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
JUST NOW: கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் செப்.11,12ம் தேதிகளில் வருகை தரவுள்ளதையொட்டி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல்வரின் பயண வழித்தடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் (UAVs) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
கிருஷ்ணகிரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <