News June 23, 2024
ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மாணவர்கள்

இன்று நடைபெறவிருந்த முதுநிலை NEET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, தேசிய தேர்வு முகமை நேற்று இரவு அறிவித்தது. கடைசிநேர அறிவிப்பால், தேர்வுக்கு தயாரானவர்கள் கடும் பாதிப்படைந்தனர். குறிப்பாக, தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நீண்டதூரம் பயணித்தவர்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதுபோன்ற அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
முதலில் எம்ஜிஆர், அடுத்து அண்ணா: விஜய்யின் வியூகம்

திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பாக பேசிய விஜய், அடுத்ததாக அரியலூரில் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இப்போது பேசப்போகும் இடம் அண்ணா சிலை. 1967, 1977 ஆகிய 2 தேர்தல்களில் இந்த இருபெரும் தலைவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தைத் தான் விஜய் 2026-ல் எதிர்பார்க்கிறார். அதனாலேயே, பரப்புரையை அந்த தலைவர்களின் சிலை அருகே இருந்து தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
News September 13, 2025
பாலூட்டும் தாய்மார்கள் இதை மறக்க வேண்டாம்!

தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால், பால் சுரப்பது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 8 முறை வரை குழந்தைகளுக்கு பாலூட்டலாம். நீரிழப்பு தாய்ப்பால் சுரப்பை தடுக்கும். அதனால், உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஓட்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு, பாதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவும். தாய்ப்பால் கொடுக்காத சமயத்தில் பிரெஸ்ட் பம்ப் கருவியை பயன்படுத்துங்கள். SHARE IT.
News September 13, 2025
தாலிபான் தாக்குதலில் 12 பாக்., ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தானில், ராணுவ வாகனத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் இருந்தும், கடும் தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எதிர்பாராத தாக்குதல் என்பதால் ராணுவத்தினரால் எந்த பதிலடியும் கொடுக்க முடியாமல், 12 வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய கும்பல் ராணுவத்தின் ஆயுதங்களுடன் அங்கிருந்த தப்பியது. தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ – தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.