News June 23, 2024
71,000 டன் வெங்காயம் கொள்முதல்

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மொத்தம் 5 லட்சம் டன் வெங்காயத்தை ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 70,987 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது. கடந்தாண்டு, இதே கால கட்டத்தில் 74,071 டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
Similar News
News November 16, 2025
2 ஆண்டுகளில் 12 நாடுகளில் Gen Z போராட்டம்!

1997-2012-க்கு இடையில் பிறந்த தலைமுறையே Gen Z. கடந்த 2 ஆண்டுகளில் நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், கென்யா, பெரு, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, பராகுவே, மாலத்தீவு, மெக்சிகோ என 12 நாடுகளில் Gen Z நடத்திய போராட்டங்களில் சில ஆட்சியையே கவிழ்த்துள்ளன. ஊழல், வேலையின்மை போன்ற காரணங்களுக்காக போராடும் இவர்கள், உலகளவில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தியாக வளர்ந்து வருகின்றனர்.
News November 16, 2025
நகை கடன்.. வந்தது முக்கிய அறிவிப்பு

அடகு கடை வணிகர்கள், தனியார் நிதிநிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு அதிக வட்டி(30% வரை) பெற்றுக் கொண்டு, அதே நகைகளை வங்கிகளில் குறைந்த வட்டிக்கு(8-17%) கடன் பெற்று பயனடைந்து வந்தனர். மறு அடகு என அழைக்கப்படும் இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. நகைகளின் உண்மையான உரிமையாளர்களை அறிந்து நகை கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வங்கியை நாடுவதே சிறந்தது.
News November 16, 2025
டிகிரி போதும்.. 1,353 பணியிடங்கள்: APPLY

AIIMS ஹாஸ்பிடலில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அதிகாரி, எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 1,353 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, 12th, டிகிரி, Engineering (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,000 – ₹1,51,100 பணிகளுக்கேற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.2. தேர்வு நாள்: டிச.22 – 24. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <


