News June 23, 2024
மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துள்ளது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இதுவரை விஷச்சாராயம் விற்றவர்கள் உள்பட 8 பேர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இதில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரியான செந்தில் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா? REQUEST

அக்.20-ல் திங்களன்று தீபாவளி வருவதால் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், கடந்த ஆண்டைபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்னரே அறிவித்தால் ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய வசதியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை பரிசீலித்து அரசு விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. SHARE
News September 16, 2025
இந்த ஜூஸ் குடித்தால் BP குறையும்

தினசரி 250 மிலி அளவில், ஒருமாதம் தொடர்ந்து பீட்ரூட் ஜுஸ் குடித்தால் உயர் ரத்த அழுத்தம்(BP) குறையும் என லண்டன் ராணி மேரி பல்கலை., ஆய்வில் தெரிய வந்துள்ளது. பீட்ரூட், இலைக் காய்கறிகளில் உள்ள அதிக நைட்ரேட் சத்துதான் BP குறைய காரணமாகிறது. ஆனால், தினசரி பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை நிறுத்தினால், அடுத்த 2 வாரங்களில் மீண்டும் BP பழைய நிலைக்கு வந்துவிடும். இதை ட்ரை செய்யும்முன், மருத்துவரை ஆலோசிக்கவும். SHARE
News September 16, 2025
மீண்டும் ARM – SK காம்போ?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘மதராஸி’ படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன், எதிர்பார்க்கப்பட்ட ₹100 கோடி கலெக்ஷனையும் படம் வசூலிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் AR முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதையை மதராஸி பட ஷூட்டிங்கின்போது ARM கூற, அது SK-க்கு பிடித்துபோனதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.