News June 23, 2024

பிரஜ்வல் ரேவண்ணா சகோதரர் மீது பாலியல் வழக்கு

image

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கர்நாடகாவின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரது இளைய சகோதரரும், கர்நாடகாவின் எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக சேத்தன் (27) என்பவர் அளித்த புகாரில் ஹோலேநரசிபுரா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Similar News

News November 16, 2025

BREAKING: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

image

அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 – டிச.23 வரை தேர்வு நடைபெறும். 6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 – 23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிச. 24 முதல் ஜன.4 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாணவர்களே, தேர்வுக்கு தயாரா?

News November 16, 2025

சுழற்பந்துவீச்சுக்கு தடுமாறும் இந்திய வீரர்கள்

image

சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் சிரமப்படுவதே தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல சாண்ட்னர், அஜாஸ் படேலின் சுழலில் திணறிய இந்தியா, நியூசிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆனது. தற்போது சைமன் ஹார்மர், மகாராஜின் சுழல் வலையில் சிக்கி 124 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் <<18303465>>இந்தியா படுதோல்வி<<>> அடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் SA வெற்றி பெற்றுள்ளது.

News November 16, 2025

BREAKING: வங்கி கணக்கில் ₹2,000… அரசு அறிவிப்பு

image

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை (₹2,000) நவ.19-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த தவணைத் தொகை ஆகஸ்ட் 2-ம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த தவணைக்காக காத்திருந்தவர்களுக்கு நற்செய்தி வெளியாகியுள்ளது. KYC பிரச்னையால் கடந்த தவணையை பெறாதவர்களுக்கு இந்த முறை ₹4,000 மொத்தமாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!