News June 22, 2024

T20 WC: இந்திய அணி அபார வெற்றி

image

T20 WCயில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய வ.தேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் நஜ்முல் 40, தன்ஷித் 29, ரஷித் ஹொசைன் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குல்தீப் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Similar News

News November 16, 2025

6-9 வகுப்புகள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை

image

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. *டிச.15- தமிழ், டிச.16-ஆங்கிலம், டிச.17-விருப்ப மொழி, டிச.18-கணிதம், டிச.19-உடற்கல்வி, டிச.22-அறிவியல், டிச.23-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையாகும்.

News November 16, 2025

பாலையாவை 3D-ல் பார்க்க ரெடியா?

image

இயக்குநர் போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா 2’ திரைப்படம் டிச.5-ல் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 22 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழுவின் இந்த அறிவிப்பால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், பனிமலையில் பாலையா சிவ தாண்டவம் ஆடும் காட்சிகளை 3D-ல் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

News November 16, 2025

BREAKING: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

image

அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 – டிச.23 வரை தேர்வு நடைபெறும். 6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 – 23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிச. 24 முதல் ஜன.4 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாணவர்களே, தேர்வுக்கு தயாரா?

error: Content is protected !!