News June 22, 2024

NTA தலைவர் அதிரடி மாற்றம்

image

நீட் முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமை (NTA) தலைவர் சுபோத்குமார் சிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த பிரதீப் சிங் கரோலா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுபோத்குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் நீட் முறைகேடுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றப்பட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

சமூக நீதியின் சாபமே திமுக: அன்புமணி

image

சமூகநீதியின் சாபமே தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் என திமுகவை அன்புமணி விமர்சித்துள்ளார். திமுகவினரின் கைகளில் அதிகாரம் கிடைத்தால், சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள், அவர்களின் சமூக அநீதிகளை கண்டு அக்கட்சியில் உள்ள வன்னியர்களே கொந்தளித்துள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக அரசின் சமூகநீதி நம்பிக்கை துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாமகவினருக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

News November 16, 2025

புயல் சின்னம்: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இன்று விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரத்திலும், நாளை மறுநாள் தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News November 16, 2025

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் இன்று காலை <<18301754>>வெடிகுண்டு மிரட்டல்<<>> விடுத்த பெண் சிக்கினார். அவர் சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த 34 வயதான ராதா என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ராதாவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல ஹாஸ்பிடலில் அவரை சேர்க்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

error: Content is protected !!