News June 22, 2024

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் வார்னர்

image

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸி., வீரர் வார்னர் 5 போட்டிகளில் 169 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக T20 WCல் இவர் இதுவரை 975 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 25 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 1,000 ரன்கள் எடுத்த 4வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை கோலி, ரோஹித், ஜெயவர்த்தனே மட்டுமே 1,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

இனி ஷாம்பு முதல் ஹார்லிக்ஸ் வரை விலை குறைகிறது!

image

ஜிஎஸ்டி வரம்பு மாற்றத்தை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனது பொருள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, ஹார்லிக்ஸ், ப்ரூ காப்பித்தூள், டவ் ஷாம்பு, கிசான் ஜாம், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப் உள்ளிட்டவற்றின் விலை செப்.22-ம் தேதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News September 13, 2025

திமுகவை சீண்டிய விஜய்

image

விஜய் தனது முதல் பரப்புரையை, திமுக எதிர்ப்புடனேயே தொடங்கியுள்ளார். 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? மாதந்திர மின்கட்டண கணக்கீடு என்னாச்சு? மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்னாச்சு? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய விஜய், நாம் கேட்டுக்கொண்டே இருந்தாலும் அவர்களிடம் பதில் இல்லை என சாடியுள்ளார்.

News September 13, 2025

தொண்டர்களாக மாற மறுக்கும் ரசிகர்கள்?

image

விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டாகிவிட்டது. இன்னும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லும் தவெக தொண்டர்கள், தியேட்டருக்கு செல்வது போன்ற மனநிலையிலேயே உள்ளனர். விஜய்யின் பேச்சை மீறி குழந்தைகளை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, அருகில் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் மீதேறி அலப்பறை செய்வது போன்ற நிலையே தொடர்கிறது. இன்றைய சம்பவங்களும் அதையே சொல்கின்றன. தேர்தலுக்குள் இந்த நிலை மாறுமா?

error: Content is protected !!