News June 22, 2024
ரயில்வே துறையில் அலட்சிய போக்கு

ரயில்வே துறைக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. “முகம் சுளிக்கும் நிலையில் தான் ரயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள் தான் இணைக்கப்படுகின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வே துறை காட்டுகிறது ” என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 8, 2025
மதுரையில் பிரபல ரவுடி உயிரிழப்பு

மதுரை, சுந்தராபுரம் மார்க்கெட் பகுதி தண்ணீர் தொட்டி அருகே ஒருவர் நேற்று இறந்து கிடந்துள்ளார். போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி கலைவாணன் கொலை வழக்கில் தொடர்புடைய அவனியாபுரம் பராசக்தி நகர் கிருஷ்ணமூர்த்தி என தெரிந்தது, அப்பகுதியில் பிரபல ரவுடியான இவரது மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 8, 2025
சைபர் மோசடியில் சிக்காதீர்கள் – காவல்துறை எச்சரிக்கை

மதுரை மாநகர் காவல்துறை சைபர் குற்ற எச்சரிக்கை: அந்நியர்களிடமிருந்து வரும் வீடியோ சாட் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். அவை பதிவு செய்து பிளாக்மெயிலுக்கு பயன்படுத்தப்படலாம். அசிங்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான சாட், படங்கள் வந்தால் பதில் அளிக்காதீர்கள். சம்பவங்களை போலீசாரிடம் புகாரளிக்கவும். சமூக வலைதளங்களில் தனியுரிமை அமைப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 8, 2025
மதுரை: அர்ச்சகர் பள்ளியில் ஓதுவார் பயிற்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் அறிக்கையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட அர்ச்சகர் ஓதுவார் பள்ளி பயிற்சிக்கு இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஓதுவார் பயிற்சிக்கு 14 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும. மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மேலும் விபரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்