News June 22, 2024
காசாவில் 42 பேர் பரிதாப பலி

காசா அகதிகள் முகாமில் இன்று இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இதோடு சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 101 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் தொடங்கியது முதல் இப்போது வரை 37,400 பாலஸ்தீனியர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
Similar News
News November 16, 2025
சுந்தர் சி விலகியதற்கு ஹிப் ஹாப் ஆதி காரணமா?

ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகியது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதற்கு ஹிப் ஹாப் ஆதி காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது, இப்படத்துக்கு அனிருத்துக்கு பதிலாக ஆதி இசையமைக்கட்டும் என சுந்தர் சி கேட்டதற்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுந்தர் சி விலகினார் என்கின்றனர்.
News November 16, 2025
நாளை 7 மாவட்டங்களில் விடுமுறையா? வந்தது Alert

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 16, 2025
மூன்று திசைகளில் பார்வையை பதித்த விஜய்

SIR-க்கு எதிராக தவெக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2-ம் கட்ட தலைவர்களை களமிறக்கியுள்ளார் விஜய். தலைநகர் சென்னையில் புஸ்ஸி ஆனந்த், கொங்கு மண்டலமான கோவையில் அருண்ராஜ், தென்மண்டலமான மதுரையில் நிர்மல்குமார் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2-ம் கட்ட தலைவர்கள் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும், கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.


