News June 22, 2024
போதையில் சாலையில் உறங்கிய நபரால் ட்ராபிக் ஜாம்

குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஜாரில் அமைத்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் ஒருவர் குடித்துவிட்டு அவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு அச்சாலையில் ஓரமாக சுமார் நான்கு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
Similar News
News August 31, 2025
காஞ்சிபுரத்தில் இலவச சட்ட உதவி!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27428840, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17573447>>தொடர்ச்சி<<>>
News August 31, 2025
இலவச சட்ட ஆலோசனை மைய சேவைகள் (2/2)

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு இலவசமாக ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர்களை பெறலாம். நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். இப்படி பல விஷயங்கள் உள்ளன. மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.
News August 31, 2025
காஞ்சிபுரம்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

காஞ்சிபுரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)