News June 22, 2024
நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையான முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதித்துள்ளது என்ற அவர், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் என்றார். நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
Similar News
News November 16, 2025
சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிந்தகுஃபா காவல் நிலைய பகுதியின் கீழ் உள்ள பெஜ்ஜி வனப்பகுதியில் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், இந்த ஆண்டில் இதுவரை சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
News November 16, 2025
தமிழ் நடிகர் மரணம்.. கதறி துடிக்கும் குடும்பம்

சமூக நீதி கருத்துகளை கலகலப்பான பாணியில் சினிமாவாக அளித்த இயக்குநரும், நடிகருமான வி.சேகர் நேற்றைய முன்தினம் காலமானார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான தி.மலை, தெய்வாநத்தம் கிராமத்திற்கு சேகரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்த உறவினர்கள், ஊர் மக்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. சேகரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே, அவரது உடலும் இன்று மதியம் அடக்கம் செய்யப்படவுள்ளது.
News November 16, 2025
அமீபா தொற்று: சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், மூளையை திண்ணும் அமீபா தொற்று கேரளாவில் உள்ளதால், பம்பை நதியில் குளிக்கும்போது, மூக்கு, வாய் ஆகியவற்றை நன்றாக மூடிக்கொள்ளும்படி அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு 04735203232 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். ஐயப்ப பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


