News June 22, 2024
ஒருநாள் கிரிக்கெட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்

கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளைப் படைத்துள்ளனர். அதுபோன்ற ஒரு சாதனையை இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தன்னகத்தே வைத்துள்ளார். 2001இல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், அந்த அணியை சீட்டுக்கட்டைப் போல சிதறடித்தார். 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ஜிம்பாப்வேயின் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த சாதனை 23 ஆண்டுகளைக் கடந்தும் முறியடிக்கப்படவில்லை.
Similar News
News September 13, 2025
BREAKING: விஜய் உடன் இணையும் பிரபல நடிகர்

‘இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், கடந்த மாதம் ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என பார்த்திபன் கூறியிருந்த நிலையில், அவர் அல்லது வேறு ஏதாவது சினிமா பிரபலம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
News September 13, 2025
மணிப்பூர் மக்களின் அன்பு நெகிழச் செய்கிறது: PM மோடி

தைரியத்திற்கும் வீரத்திற்கும் பெயர் பெற்றது மணிப்பூர் என <<17697101>>PM மோடி<<>> தெரிவித்துள்ளார். மோசமான வானிலையால் தன்னால் ஹெலிகாப்டரில் வர முடியவில்லை, அதனால் சாலை வழி வந்தேன். சாலை நெடுகிலும் நான் கண்ட காட்சி நெகிழச் செய்ததது, அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வழி நெடுகிலும் மக்கள் மூவர்ண கொடியை ஏந்தி அன்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
விஜய்யின் கூட்டத்தில் சிக்கிய ப.சிதம்பரத்தின் கார்

பிரச்சாரத்துக்காக திருச்சி சென்ற விஜய்யின் வாகனத்தை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு போர்க்குவரத்து ஸ்தம்பித்தது. இதில், குன்றக்குடி செல்வதற்காக அவ்வழியாக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரும் சிக்கியதால் பரபரப்பு நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கு, பிறகு போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து ப.சிதம்பரத்தின் காரை அனுப்பிவைத்தனர்.