News June 22, 2024
மாடுகள் ஏலம் விடப்படும்: கே.என்.நேரு

நகர்ப்புறங்களில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல்முறை ₹5000, 2ஆம் முறை ₹10000 அபராதம் விதிக்கப்படும் என்றார். இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் எச்சரித்தார்.
Similar News
News November 16, 2025
2-ம் இடத்துக்கு தான் போட்டியே: கோவி செழியன்

திமுக Vs தவெக என்னும் நிலையை ஏற்படுத்த வேண்டுமென விஜய் முயற்சிக்கிறார் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். ஆனால், கள நிலவரத்தில், திமுகவுக்கே முதலிடம் என உறுதிப்பட கூறிய அவர், 2-ம் இடத்திற்கு தான் தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடையே போட்டி நிலவுவதாகவும் கூறியுள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, ஸ்டாலின் CM ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உங்கள் கருத்து என்ன?
News November 16, 2025
சீக்கிரம் வேலை கிடைக்க இதுல அப்ளை பண்ணுங்க

இளைஞர்கள் LinkedIn, Naukri-ல வேலைக்கு அப்ளை பண்றது வழக்கம். இந்த தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்குறதுனால நம்ம Profile shortlist ஆகுறது கடினமான விஷயமா இருக்கு. இதனால LinkedIn-க்கு பதிலா /UPlers.com, /Glassdoor.com தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்ணா எளிதில் Profile shortlist ஆகி வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமா இருக்கு. செக் பண்ணி பாருங்க. SHARE THIS.
News November 16, 2025
RR-ல் இருந்தபோது மனதளவில் சோர்ந்துபோன சஞ்சு

கடந்த சீசனில் RR அணி சிறப்பாக விளையாடாதது சஞ்சு சாம்சனை மிகவும் பாதித்ததாக அணியின் உரிமையாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதனால் புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டுமென எண்ணிய சஞ்சு, அணியில் இருந்து விலகுகிறேன் என கோரிக்கை வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், RR அணிக்காக சஞ்சு சாம்சன் செய்தவற்றை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


