News June 22, 2024
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எல் முருகன் தரிசனம்

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவர் இரண்டாவது முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
Similar News
News September 8, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று(செப்.7) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.
News September 8, 2025
நாமக்கல்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

▶️நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
▶️அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 8, 2025
நாமக்கல்லில் இளம்பெண் தற்கொலை!

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே உள்ள எஸ்.நாட்டமங்கலம் ஊராட்சி குட்டமுக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரத் மனைவி மோபிஷா(30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறால் கடந்த செப்.5ஆம் தேதி விஷம் அருந்திய மோனிஷா சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று(செப்.7) உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.