News June 22, 2024

திருச்சி: மாநகராட்சி முழுவதும் அதிரடி ரெய்டு

image

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தும் கடைகளை ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அனைத்து மண்டலங்களிலும் 65,200 மொத்த அபராத தொகை பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News August 19, 2025

திருச்சி: இலவச செல்போன் பழுது நீக்கும் பயிற்சி

image

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச செல்ஃபோன் பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட, 18-45 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 25-ம் தேதியே கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW !!

News August 19, 2025

திருச்சி: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 50,000 முதல் 70,000 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகையால் திருச்சி மாவட்டத்தில் கம்பரசம்பேட்டை, மேலூர் உள்ளிட்ட காவிரி கொள்ளிட கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

8 காவல் அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் 8 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் காமினி இன்று மாலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாலக்கரை, அரியமங்கலம், தில்லைநகர், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் பணியாற்றும் எஸ்எஸ்ஐ கள் பேட்ரோல் எனப்படும் ரோந்து பணிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!