News June 22, 2024
1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு

மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றதும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் சர்ச்சையாகி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை 7 மையங்களில் மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது.
Similar News
News September 13, 2025
டயரில் இருக்கும் V,W,Y எழுத்துக்களின் அர்த்தம் என்ன?

டயர்களில் கொடுக்கப்பட்டிருக்கும் V,W,Y ஆகிய எழுத்துக்களின் அர்த்தம் தெரியுமா? இவை டயர் ஸ்பீடு ரேட்டிங். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர்தான், டயர் ஸ்பீடு ரேட்டிங் வரையறை செய்யப்படுகிறது. V – 240 கி.மீ வேகம், W – 270 கி.மீ வேகம், Y – 300 கி.மீ வேகம் வரை அதிகபட்சமாக செல்லலாம் என்பதை குறிக்கிறது. ஒரு வாகனத்தில் ஒரே ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்கள்தான் தான் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். SHARE IT.
News September 13, 2025
₹21,000 சம்பளம்… 12th பாஸ் போதும்

மத்திய உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 Security Assistant (Motor Transport) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, 4 சக்கர வாகன லைசன்ஸ் அவசியம். வயது வரம்பு: 18 – 27. தேர்வு முறை: எழுத்து, டிரைவிங், நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.28. சம்பளம்: ₹21,700 – ₹69,100. மேலும் விவரங்கள் & விண்ணப்பிக்க இங்கே <
News September 13, 2025
இந்தியா மீது வரிவிதித்தது எளிதான காரியமல்ல: டிரம்ப்

உலகளவில் இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மீது 50% வரிவிதித்தது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த முடிவை எடுத்தது எளிதான காரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உக்ரைன் போர் என்பது ஐரோப்பாவின் பிரச்னை எனவும், ஆனாலும், இதை தீர்க்க அமெரிக்கா தான் அதிக பணிகளை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.